சீமான் அண்ணனை விட விஜய் பெரியாளு இல்லை - கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் பரபரப்பு பேட்டி!
ntk Seeman tvk vijay kovai
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், கட்சியில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "சீமானின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுக்கும் முடிவில் உடன்பாடு இல்லை. பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறி உள்ளோம்.
கொள்கைக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது. அதில் உடன்பாடு இல்லை. அடுத்தகட்ட தலைவர்கள் யாரும் இல்லை. எதையும் செய்ய முடியவில்லை.
எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வெற்றியை நோக்கிய பயணம் இல்லை. கொள்கையில் உடன்பாடு இல்லை.
சீமான் அண்ணனை விட விஜய் பெரியாளு இல்லை" என்று தெரிவித்தார்.
English Summary
ntk Seeman tvk vijay kovai