நாதக வேங்கைவயலில் பிரச்சாரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்த முறை மக்களவைத் தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்திற்கு நீண்ட நாட்கள் ஆகியும் நீதி வழங்கப்படாததால் வேங்கைவயல் கிராம மக்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து பேனல் பதாகைகளை வைத்துள்ளனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கை வயலில் குடிநீர் தொட்டில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் இன்று சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. மூன்று மாதங்களில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வோம் என உயர்நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

எந்த அரசியல் கட்சித் தலைவரும் எந்த அரசியல் கட்சி வேட்பாளரும் வேங்கை வகைகளுக்கு வாக்கு சேகரிக்க செல்லாத நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ்க்கு நாம் தமிழர் கட்சி நட்சத்திர பேச்சாளர் சாட்டை துறைமுருகன் வேங்கைவயல் கிராத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாதக்கா வேட்பாளர் ராஜேஷ் பேசுகையில், தேர்தலைப் புறக்கணிக்காமல் உங்கள் வாக்குகளை எனக்கு செலுத்துங்கள் நான் நீதி பெற்று தருகிறேன் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ntk vengaivayal village propaganda


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->