'டான்' (ரவுடியாக) ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை - கங்கனா ரனாத்.!
Nupur Sharma issue
பாஜகவின் டெல்லி ஊடக பிரிவு தலைவர் நவீன்குமார் டிவிட்டர் பக்கத்திலும், பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாத மேடையிலும், நபிகள் நாயகத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக அவர்கள் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட 15 நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு மத்திய அரசும் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், 'இந்து மத கடவுள்களை அவமதிக்கும் போது, நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம், நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள்' என்று, இஸ்லாமிய மக்களுக்கு அறிவுரை கூறியுள்ள பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத், நூபுர் சர்மாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் இன்ஸ்ட்டா பதிவில், "நூபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது. அதற்காக எத்தனை மிரட்டல்கள் அவருக்கு வருகின்றது என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த விவகாரத்தில் நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். நாங்கள் அன்றாடம் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.
நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து 'டான்' (ரவுடியாக) ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது" என்று பாலிவுட் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.