#BREAKINH || யாரும் பதற்றமடைய வேண்டாம்., அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடி போட்ட உத்தரவு.!
OMICRON ISSUE PM MEETING WITH CMs
ஒமைக்ரான் நோய் தொற்று பரவலுக்கு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
முந்தைய கொரோனா நோய்த்தொற்று பரவல்கள் உடன் இதனை ஒப்பிடும்போது, இந்த தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சற்று முன்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியதாவது,
"சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு குறைந்த அளவில் பாதிப்பு ஏற்படும் வகையில் தான், நோய் தடுப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும். பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாம் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாலே இந்த நோய் தொற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். வீடுகளில் தனிமைப்படுத்தி சிறப்பான சிகிச்சை அளித்தால் போதும், மருத்துவமனைக்கு அவர்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ளலாம்.
தடுப்பூசியை தவிர வேறு எதுவும் நம்மை பாதுகாக்காது, பண்டிகை காலத்தில் நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
OMICRON ISSUE PM MEETING WITH CMs