ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகத்திற்கு 220 எம்பிகள் ஆதரவு, 149 எம்பிகள் எதிர்ப்பு!
One Nation One Election Parliament MP BJP Congress DMK
மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை முன்மொழிந்து, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் சாத்தியக்கூறை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது.
அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மசோதா இன்று (டிசம்பர் 17) மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன; ஆனால் தெலுங்கு தேசம் உள்ளிட்ட 19 மாநில காட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப பரிந்துரைக்க, அதற்கான வாக்கெடுப்பில் 269 எம்.பிக்கள் ஆதரவாகவும், 198 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மையுடன் மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
one nation one election Lok Sabha bill Amit Shah
English Summary
One Nation One Election Parliament MP BJP Congress DMK