‘ஆபரேஷன் கந்துவட்டி’  தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் அரங்கேறிய சம்பவங்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு அதிர்ச்சி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்று, காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், “கடந்த ஒரு வாரத்தில், தமிழகம் முழுவதும் கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி தொடர்பாக 124 புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளது என்று, டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "124 புகார் மனுக்களில், 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டடு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

கந்துவட்டி குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 பேரின் வீடுகளிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுக்கள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள் மற்றும் சேலம் மாநகரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OperationKanthuvatti TNPolice DGP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->