அதிரடியாக 17 தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு!!! த.வெ.க தலைவர் விஜய் பொதுக்குழுவில் கூறப்போவது என்ன?
Opportunity to pass 17 resolutions TVK leader Vijay general assembly
விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கு கழகம் கட்சியை தொடங்கியதனை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறையுள்ளது.

அவ்வகையில், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.இதற்கு முன்னதாக 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.இது விஜயின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Opportunity to pass 17 resolutions TVK leader Vijay general assembly