என்ஐஏ சோதனையை ஓட்டு வங்கியாக மாற்ற போகும் எதிர்க்கட்சிகள்! பதற்றம் அடையும் பாஜக!
Opposition parties are going to turn the NIA test into a vote bank
பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள்!
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் " இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் குறிப்பாக மேட்டுப்பாளையம், திண்டுக்கல், கோவை, திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு போன்ற பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்கள், வாகனங்கள் மற்றும்தொழில் செய்யும் பகுதிகளை குறி வைத்து கடுமையான தாக்குதலை ஒரு கும்பல் நடத்திக் கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் என்ஐஏ சோதனையானது நடைபெற்றது. அச்சோதனையில் தேசத்தின் பாதுகாப்பிற்கு எதிராக உள்ள பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் என்ஐஏவை தவறாக பயன்படுத்தியதாக சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக தேச பாதுகாப்பில் விளையாடக் கூடாது. நாட்டின் பாதுகாப்பு குறித்து ஏஜென்சிகள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது பலவிதமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இப்படி இருக்கும் பட்டத்தில் திமுக ஒரு தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக்கூடாது. தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த சகோதரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தமிழக காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
எல்.முருகனின் இந்த பேட்டியின் மூலம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதே யுக்தியை கடந்த சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தி திமுக ஆட்சியைப் பிடித்தது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்துகள் ஆகும்.
English Summary
Opposition parties are going to turn the NIA test into a vote bank