பாஜகவுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும்!...திருமாவளவன் வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திருமதி பிரியங்கா காந்தி அவர்களுக்கும்;  ஜார்கண்ட் மாநிலத்தின்ல்: மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வயநாடு இடைத்தேர்தலில் திரு. ராகுல் காந்தி அவர்கள் பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியும் திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒன்றிய பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதலமைச்சர் பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம்  தாண்டி  மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் மகத்தான தலைவரான ஹேமந்த் சோரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. “ இந்த வெற்றி மோடி -அமித்ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பாஜக வென்றுள்ளது.இது ‘மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், இம்முடிவு பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை  எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties should consolidate their votes against bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->