ஜெயலலிதா மரணம் : இன்று ஆறுமுகசாமி ஆணையம் ஓபிஎஸ் மற்றும் இளவரசியிடம் விசாரணை.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இளவரசி ஆகியோர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிறார்கள். அதன்படி காலை 10.30 மணிக்கு இளவரசியிடமும், அதன்பின்னர் 11.30 மணிக்கு ஓபிஎஸ் அவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops and elavarasi investigate in Arumugamsamy Commission


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->