#திடீர் திருப்பம் || முக்கிய புள்ளியை கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்!
OPS Announce 03122022
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், "கோவை K. செல்வராஜ், M.A., Ex. M.L.A. அவர்கள் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த மூன்று மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகர், கோயம்புத்தூர் மாநகர் வடக்கு, கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மற்றும் கோயம்புத்தூர் புறநகர் வடக்கு என நான்கு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
D.மோகன் அவர்கள்,
கோயம்புத்தூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் (கோவை தெற்கு, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள்)
சுப்ரீம் L. இளங்கோ அவர்கள்,
கோயம்புத்தூர் மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
(கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர். சட்டமன்றத் தொகுதிகள்)
குறிஞ்சி M. மணிமாறன் அவர்கள், கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகள்)
சூலூர் P.ராஜேந்திரன், B.A., B.L., அவர்கள், கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (கோவை வடக்கு, சூலூர் சட்டமன்றத் தொகுதிகள்)
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக "ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருவதால் அதிமுகவில் இருக்க விரும்பவில்லை என்று கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.