பொது மேடையிலேயே.. டிடிவி காலில் விழுந்த முக்கிய புள்ளி.! யாருன்னு பாருங்க.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் அமைந்துள்ள பங்களாவில் அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் டிடிவி தினகரன் வந்தபோது அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா டிடிவி தினகரனுக்கு சால்வை அனைத்து மரியாதை செலுத்தியதோடு திடீரென காலில் விழுந்து வணங்கினார்.

ஓ.ராஜாாவை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களும் டிடிவி தினகரன் காலில் விழுந்து வணங்கினர். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS brother ORaja fell on TTV feet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->