#BigBreaking | ஓபிஎஸ் தொடர்ந்த அவசர வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
OPS Chennai HC Case Tamilnadu ADMK EPS
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை கோரிய ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு, நாளை மறுநாளே விசாரணைக்கு வர உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் இறுதி வாதம் வருகின்ற 20 மற்றும் 21ம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஏப்ரல் 12ஆம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்வதாக உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளதால், ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தற்போது அவசர முறையீடு செய்யப்பட்டது.
ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த இந்த அவசர முறையீட்டை தொடர்ந்து தற்போது நீதிபதிகள் மகாதேவன், முஹம்மது சபிக் அமர்வு நாளை மறுநாள் விசாரிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொது குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு மதியம் 2 மணி அளவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது,
English Summary
OPS Chennai HC Case Tamilnadu ADMK EPS