தொடர் இழுபறி... அவசர ஆலோசனையில் ஓபிஎஸ்: ஆதரவாளர்கள் திடீர் வலியுறுத்தல்!
OPS consultation Supporters
பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கு தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுப்பறி நீடிக்கிறது.
சின்னம் மற்றும் கேட்கும் தொகுதி கிடைக்காத சூழலால் இன்று ஓ. பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இன்று நடைபெறும் அணியின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க ஓ. பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மரியாதை குறைவாக நடத்தும் பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியேறி தனி சின்னத்தில் தனியாக போட்டியிடுவோம் என ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
OPS consultation Supporters