தர்மயுத்தம் தொடங்கியது - ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!
OPS Dharmayuththam 2 O Against EPS ADMK
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
அதே சமயத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஓ பன்னீர்செல்வம் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், கடந்த மாதம் ஓ பன்னீர்செல்வத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டதை சட்டப்பேரவை தலைவர் அலட்சியம் செய்து ஓபிஎஸ் பக்கம் ஆதரவாக நடந்து கொண்ட விவகாரம் அரங்கேறியது.
இது ஓபிஎஸ் தரப்பிற்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்துள்ள நிலையில், அதிமுகவின் சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காகதுவக்கியுள்ளோம் என்று, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேனி, பெரியகுளம் ஒ.பி.எஸின் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டபோது, நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
OPS Dharmayuththam 2 O Against EPS ADMK