எம்.பி பதவிக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா?..ஓ.பி.எஸ்-க்கு செல்லூர் ராஜி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணிவுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதனால், அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்துக்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் ஆதரித்து செல்லூர் ராஜ் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செல்லூர் ராஜ் பேசுகையில், தண்ணீரில் வாழும் தவளையும், தலையில் வாயும் எலியும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளது. திமுகவிற்கு மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு மத்தியில் ஒரு நிலைப்பாடு.

டீக்கடையில் டீ கிளாஸ் கழுவிக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூன்று முறை முதலமைச்சர் ஆகினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையுடன் ஓ.பி.எஸ் சேரலாமா? எம்.பி பதிவிற்காக ஓ.பன்னீர்செல்வம் பாஜகயுடன் கூட்டணி வைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops mp seat bjp Alliance sellur Raj speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->