ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட திட்டம்.. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் சும்மா இல்லாத ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal



அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அதில், நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொது செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுகவின் கட்சி விதிகளுக்கும், அதிமுகவிற்கு துரோகம் செய்யக்கூடிய வகைகளும் செயல்பட்டதால், அதிமுகவின் பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ். தரப்பில் பதில் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் தரப்பில் மனு அளித்துள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops new plan for eps posting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->