எடுத்த முடிவில் திடீர் மாற்றம் ஏன்? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி!
OPS Press meet About AIADMK Election 26032023
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம், "ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கு தான் என்று கூறினீர்கள். தற்போது பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட விரும்புதாக தெரிவித்துள்ளீர்கள் ஏன் இப்படி முரண்பாடு? திடீரென உங்கள் முடிவில் மாற்றம் செய்து உள்ளீர்கள்? காரணம் என்ன? என்று தெறியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு பதிலளித்த ஓபிஎஸ், "சாதாரண தொண்டன் கூட கழகத்தின் விதிப்படி உச்சபட்ச தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் (இபிஎஸ்) விதியை மாற்றி, 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று விதியை திருத்தி இருக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் 50 ஆண்டுகளாக சட்ட விதிகளின்படி கட்சியை வழிநடத்தி, மகத்தான வெற்றியை கொண்டு வந்து, தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்" என்றார்.
அப்போது செய்தியாளர் : தொண்டர்கள் போட்டியிடக்கூடிய வகையில் பொதுச் செயலாளர்கள் விதி திருத்தப்பட்டால், நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
ஓபிஎஸ் : ஏற்கனவே சொல்லிவிட்டேன். கழகத்தினுடைய சட்ட விதிமுறைப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர் புதுப்பிப்பதற்கும் கழகத்தினுடைய சட்ட விதி இருக்கிறது.
அந்த சட்ட விதிமுறைபடி, உறுப்பினர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்பட வேண்டும். உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து அவர்கள் தலைமை கழகத்திற்கு கொடுத்த பிறகு, கழகத்தினுடைய சட்ட விதிமுறைப்படி, அவர்களுக்கெல்லாம் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்ட பின்னால், கழகத்தினுடைய அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறை அனைவரும் வாக்களித்து 'பெட்டி வைத்து' நடக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
அப்படி செய்தால் உறுதியாக தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலை தான் புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து. புரட்சித்தலைவி அம்மா காலம் வரை இருந்தது. அதை மாற்றி இருக்கிறார்கள். மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம் என்றார் ஓபிஎஸ்.
English Summary
OPS Press meet About AIADMK Election 26032023