ஓ.பிஎஸ் குழுவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதற்கான நிர்வாகிகளை நியமித்துள்ளார். 

இந்தக் குழுவின் மூலம் அதிமுகவை மீட்க போவதாக அறிவித்திருந்த ஓ.பன்னீர்செல்வம் அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவரை நீக்கியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதினாலும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினுபாலன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவிலிருந்து இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்" என அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS removed vinubalan from his team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->