#BigBreaking | அதிமுக வேட்பாளராக களமிறங்கும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்! இபிஎஸ்.,க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் அதிகாரி!
OPS side candidate also AIADMK candidate Karnataka Election 2023
கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்தரப்பில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் மூன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக இன்று காலை 11 மணியளவில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்பில் களம் இறக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
அதன்படி, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் கோலார் தங்க வயல் தொகுதியில் களமிறக்கப்பட்ட ஆனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட கே. குமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதில், காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே குமார் அதிமுகவின் வேட்பாளராக தேர்தல் அதிகாரி ஏற்று கொண்டுள்ளார், வேட்பாளர் பெயர் பட்டியலில் வேட்பாளர் குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என்று குறிப்பிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதிகள் அன்பழகன் வேட்பு மனுவும் தேர்தல் அதிகாரியால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காந்திநகர் தொகுதி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயருக்கு அருகே அதிமுக என்று குறிப்பிடப்பட்டு இருப்பதுm எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுவதற்கு உண்டான அங்கீகாரத்தையும் வழங்கி இருந்த நிலையில், தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரின் பெயருக்கு அருகே அதிமுக என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் முறையிடப்பட்டு, அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
OPS side candidate also AIADMK candidate Karnataka Election 2023