வாய் விட்ட பண்ருட்டியால் பதறிப்போன ஓ.பி.எஸ்! விவகாரமே வேற.!
Ops team announced AIADMK GC appeal case numbered by SC
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெறுவது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் "தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலை குறித்து விவாதித்தோம். மக்களோடும், கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எப்படி? எங்கு? எவ்வாறு? நடத்துவது குறித்து விவாதித்தோம்.
அதிமுக பொது குழு தீர்மான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம் என பேசினார். அப்போது அருகில் இருந்த ஓபிஎஸ் பதறி போய் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஏற்கனவே மேல்முறையீடு செய்து வழக்கு நம்பர் ஆயிடுச்சு என ரகசியமாக காதில் கூறினார்.
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்து நம்பர் ஆகிவிட்டது. எனவே சட்ட போராட்டம் ஒருபுறமும் புரட்சி பயணம் மறுபடியும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறி செய்தியாளருக்கு சந்திப்பில் சமாளித்தார். பாஜக தலைமையிலான கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என ஒபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ops team announced AIADMK GC appeal case numbered by SC