தமிழகத்தில் அடுத்த பரபரப்பு! மெகா கூட்டணிக்காக முக்கிய புள்ளியை சந்திக்கும் ஒபிஎஸ்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறு நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று உள்ளீர்களா? பாஜக தலைமையிலான கூட்டணியில் உங்கள் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினர். 

அதற்கு கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தங்கள் அணியை ஏமாற்றி விட்டதாக ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில் அதிமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை மோடி தாங்கி பிடித்து ஒத்துழைப்பு தந்ததால் பாஜக தலைமையக கூட்டணியில் தொடர ஓபிஎஸ் நினைப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் உலக அளவில் மோடி புகழ் உயர்ந்திருக்கும் நிலையில் தேசிய அளவில் அவரை தவிர நல்ல பிரதமர் சான்ஸ் இல்லை என ஓபிஎஸ் கருவதால் பாஜக கூட்டணியில் தொடர்வது என ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரசியலில் டி.டி.வி தினகரனுடன் இணைந்து செயல்படுவது என ஓபிஎஸ் முடிவு செய்துள்ள இந்த சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது என ஓபிஎஸ் முடிவெடுத்து விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS to meet Panruti Ramachandran regarding BJP alliance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->