உலகரங்கில் பெருமை.. சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு ஓ.பி.எஸ். வாழ்த்து.!
ops wish for chess player gukesh
சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் நடைபெற்ற 48வது லா ரோடா சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 15 வயதான குகேஷ் தனது கடைசி சுற்றில் இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் விக்டரை 26 நபர்களில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 9 சுற்றுகளில் 8 புள்ளிகளை சேர்த்து முதலிடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து இளம் வீரரான பிரக்யானந்தா மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ் நாட்டு வீரர் குகேஷுக்கும், மூன்றாவது இடம் பிடித்த பிரக்யானந்தாவிற்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெயினில் நடைபெற்ற லா ரோடா சர்வதேச சதுரங்க வாகயைர் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 15வயது சிறுவன் குகேஷ் எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் வாகையர் பட்டத்தை வென்றிருப்பதும், இதே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா மூன்றாமிடத்தை பிடித்துள்ளதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவர்களது வெற்றி தமிழ்நாட்டை உலக அரங்கில் பெருமைப்பட வைத்துள்ளது. இருவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இருவரும் மேன்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
English Summary
ops wish for chess player gukesh