இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்! ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ வெளியிட்ட அறிவிப்பு!
Pahalgam attack UN
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா–பாகிஸ்தான் உறவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அட்டாரி–வாகா எல்லையை மூடி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கிய விசாக்களையும் ரத்து செய்துள்ளது.
இதற்கு பதிலளிக்க பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்து, சிம்லா ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. மேலும், சிந்து நதி நீர் தடுப்பது போர் அறிவிப்பாகவே கருதப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இருநாடுகளும் தங்கள் முப்படைகளை முழு தயார் நிலையில் வைத்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை, நிலைமை மேலும் மோசமாகும் அபாயத்தைத் தவிர்க்க இருநாடுகளும் அதிகபட்ச நிதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்: “பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறோம். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகள் அமைதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர வேண்டியது அவசியம். மேலும் உறவு மேலும் குலையாதவாறு இருநாடுகளும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.