ரைட்டு., இங்குட்டும் இப்படியா? பெட்ரோல் இல்லை., வங்கியில் பணம் இல்லை.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் பொருளாதார நெருக்கடி தற்போது தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக அந்த நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி பற்றி எதுவும் பேசாமல் தன்னுடைய ஆட்சி, அதிகாரம் பறி போனது குறித்தும், அதில் சதி இருப்பதாகவும் போராட்டம் நடத்தி வருகிறார். இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரின் டிவிட்டர் பதிவில்,

"லாகூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை., ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை., 

அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்" என்று அரசியல்வாதிகளை விமர்சித்து தனது கேள்வியை முன்வைத்துள்ளார். இவரின் இந்தப் பதிவில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போதைய பிரதமர் ஷெபாஷ் ஷரிப் மற்றும் மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். 

இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Muhammed hafeez Twit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->