இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள்! பாகிஸ்தான் சிறையில் 7 தமிழக மீனவர்கள்! மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்!
Pakisthan SriLankan tamilnadu fisherman
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த தகவலின் படி, இலங்கை சிறைகளில் 486 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பாகிஸ்தானில் 7 மற்றும் பஹ்ரைனில் 37 தமிழக மீனவர்களும் சிறையில் உள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளியுறவு இணையமைச்சர் கீர்த்திவரதன் சிங், "வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார்" என்று கூறினார்.
மேலும், "இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கூட்டு பணிக்குழு மூலம், மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
English Summary
Pakisthan SriLankan tamilnadu fisherman