முதலமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.? அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் தான் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினிடம்  கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது, துறை ரீதியாக திறமை வாய்ந்தவர் பழனிவேல் தியாகராஜன். முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது திறமையில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் அதிரடியாக தேசிய கட்சிக்கு வெளியேயும், கட்சிக்கு உள்ளேயும் அவருக்கு எதிராக அவ்வப்போது திரும்புகின்றனர். 

அவர் செயலாளராக இருக்கும் ஐடி விங்குக்கு ஆலோசகராக கவிஞர் மனுஷ்ய புத்திரனை கொண்டு வந்ததை பழனிவேல் தியாகராஜன் விரும்பவில்லை. எந்த அணிக்கும் ஆலோசகர் கிடையாது. அப்படி இருக்கும்போது ஐடி விங்குக்கு மட்டும் ஆலோசகர் நியமிப்பது தனது பவரை குறைக்கும் முயற்சி என பழனிவேல் தியாகராஜன் நினைக்கிறார். 

ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்த மகேந்திரன் ஐடி விங் இணை செயலாளராக நியமிக்கப்பட்ட போது இந்த பிரச்சினை எழுந்தது.  தற்போது இந்த பிரச்சினை வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தனது எதிர்ப்பை காட்டும் விதமாக பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palanivel thiagarajan resignation letter to cm stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->