திமுக தலைமை கழக பேச்சாளரின் தாய் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவரும், இந்திய திரைப்பட நடிகருமான போஸ் வெங்கட் தமிழில் முதன் முதலில் ஈர நிலம் படத்தில் நடித்தார். அதன் பின்னர், கண்ணம்மா, நகரம், தெனாலிராமன், 36 வயதினிலே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் திமுகவில் தலைமை கழக பேச்சாளராக உள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் திமுகவை ஆதரித்து தீவிரமாக தமிழக முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

இந்த நிலையில், போஸ் வெங்கட்டின் தயார் ராஜாமணி அம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"நடிகர் போஸ் வெங்கட் அவர்களின் தாயார் திருமதி.ராஜாமணி அம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்று செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன். அன்னையை இழந்து நிற்கும் போஸ் வெங்கட் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin condoles to bose vengat mother died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->