எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும்..! - பண்ருட்டி ராமச்சந்திரன்..!!
Panruti Ramachandran said AIADMK can grow only EPS thrown away
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் தோல்வி அடைந்தார். கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் த.மா.கா வேட்பாளர் யுவராஜை விட 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார்.
அதிமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த மேற்கு மண்டலத்தில் தென்னரசு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் "அதிமுகவின் தற்போதைய நிலை மிகுந்த வேதனை அளிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமையால் அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
எனினும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்தது ஆறுதலாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் மட்டுமே அதிமுக வளர முடியும். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு தொண்டர்களும் கட்சி நிர்வாகிகள் மட்டுமே வாக்களித்துள்ளனர். பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை" என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Panruti Ramachandran said AIADMK can grow only EPS thrown away