"அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மூக்கையா தேவரின் பெயர் சூட்டப்படும்" நூற்றாண்டு விழாவில் அமைச்சர் பேச்சு! - Seithipunal
Seithipunal


முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான பி கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை டெல்லியில் நடத்தயிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டியில் ஒரு முறையில் சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறந்தவர் மறைந்த மூக்கையா தேவர் அவர்கள். இது நூற்றாண்டு விழா தற்போது தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மூக்கையா தேவரின் சொந்த ஊரான  பாப்பம்பட்டியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அமைச்சர் பி மூர்த்தி, அதிமுக முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார்,  பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் திமுக தேனி மாவட்ட செயலாளர் உட்பட தமிழக அரசியல் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி மூர்த்தி பாப்பம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பிகே மூக்கையா  தேவரின் பெயர் வைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தேவர் ஐயாவின் வெங்கல சிலை பாப்பம்பட்டியில் நிறுவ முயற்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பாஜகவின் மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் ஐயாவின் புகழ்  பாப்பம்பட்டியோடு முடிந்து விடாமல்  இந்தியா எங்கும் பரவ ஃபார்வேட் பிளாக் கட்சியினர் அனுமதித்தால் டில்லியில் விழா எடுக்க நடவடிக்கை எடுப்போம் என கூறினார். மேலும் மூக்கையய்யா தேவரின் தபால் தலை வெளியிட பிரதமரிடம் சிபாரிசு செய்வதாகவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pappampatti govt school to be named as mookaya thevar minister speech in centennial celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->