#BigBreaking || மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
parliament budget 2022
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக, சற்று முன்பு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மொத்தமாக மத்திய அரசின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வருகின்ற பிப்ரவரி மாதம் ஒன்றாம் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.