என்ன ஆச்சு? தமிழக அரசின் இணையவழி பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சாா்பில், பட்டா விவரங்கள் பற்றி அறிய ''தமிழ்நிலம்'' செயலி மற்றும் தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை இணையதளத்தை (https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html) உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைப்பேசி செயலி இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை முகவரியில் பெற இயலும்.

மேலும், நிலங்களை அளவீடு செய்தல், உள்பிரிவு மற்றும் உள்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களையும் ஆன்-லைன் வழியாக மேற்கொள்ளலாம். 

இதேபோல், பட்டா, சிட்டா பாா்வையிட மற்றும் சரிபாா்க்க அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் இலவசமாக பாா்வையிட பதிவிறக்கம் செய்யலாம்.

இந்நிலையில், தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இணையவழி பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் 28.12.2024 காலை 10:00 மணி முதல் 31.12.2024 மாலை 4:00 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ”தமிழ்நிலம்” (https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html) இணையவழி  சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

patta sitta online issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->