பூனைக்கு மணி கட்டிய மோடி., கதறும் திருமாவுக்கு பல தரப்பில் இருந்து சரமாரி கேள்வி?! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவிக்கையில், "பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்படி 21 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் நிலை உருவாகும்.

பெரும்பாலும் சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் நடக்கின்ற போது, இந்த வயது வரம்பை ஒரு காரணமாக காட்டி, அவர்கள் மீதுதான் போக்சோ சட்டம் அதிகமாக ஏவப்படுகிறது.

எனவே, சாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களை எதிர்க்கக் கூடியவர்கள் இதனை வரவேற்கிறார்கள். இந்த சட்டம் அந்த அடிப்படையில்தான் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது" என்று திருமாவளவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதாவது பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால், சாதி மறுப்பு திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது சிக்கலாகிவிடும்., அப்படி செய்தால் போக்ஸோ சட்டம் பாயும்., என்று திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால்., ஒரு பெண் பள்ளி படிப்பை முடிக்கும் போது 17 வயதை பூர்த்தி செய்கிறார். அதன் பின்னர், உயர்க் கல்வியாக ஒரு 3 வருட கல்லூரி படிப்பை முடித்தால் அந்த பெண்ணுக்கு 20 வயது பூர்த்தியாகி, 21 ஆரம்பிக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்து, அடுத்து ஒரு பணிக்கு சென்று, தன் காலில் நின்று, சுயமாக சிந்திக்க கூடிய ஒரு நிலையை முழுமையாக அடைகிறாள். மேலும் பெண்ணின் உடல் நலமும் சீரானதாக இருக்கும். 

ஆனால், தற்போது 21 வயதுக்கு முன்பாகவே அப்பாவி பள்ளி, கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, கல்லூரி படிப்பை படிக்க விடாமல் அப்படி என்ன சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம்? என்று பல தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தாலியுடன் அவள் திருமண வாழ்க்கையை தொடர்வாளா? கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்துவாளா? 

21 வயது திருமண வயது உயர்வு என்பது பெண்களின் பெண்ணுரிமைக்கு ஒரு உதாரணமாக தான் இருக்குமே தவிர., திருமாவளவன் சொல்வது போல பெண்ணுக்கு அது ஒருபோதும் தடையாக இருக்காது. வேண்டுமென்றால் நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளிடம் கருத்து கேட்டு பாருங்களேன்...

சாதியை ஒழிக்கவும், மதத்தை ஒழிக்கவும் சட்டம் இயற்ற வேண்டுமே தவிர., பெண்ணை அதற்க்கு ஒரு கருவியாக பயன்படுத்துவது மிக கேவலம், அசிங்கம், அவமானம் என்று, பல தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people ask to thiruma for marriage age issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->