அதிமுகவில் இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள்.....2026 ல் இபிஸ் அதிமுகவை இழுத்து மூடுவார் - டிடிவி தினகரன் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசை கண்டு திமுக பயப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் திமுக எதற்கும் தயாரானவர்கள் என்று கூறிய அவர், தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்தவித நடவடிக்கையும் எடுப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதைப்பொருள் கலாச்சாரம்தான் காரணம் என்றும்,, இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகவும், இது வருங்கால சமுதாயத்தின் குரல்வலையை நெறிக்கும் செயல் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 தேர்தலோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி இழுத்து மூடிவிடுவார்  என்று விமர்சித்தார். மேலும் இரட்டை இலை இருப்பதால்தான் அங்குள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் பொறுமையாக உள்ளனர்.சர்க்கரை நோயாளிகள், வயதானவர்களை வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டு, அவர் வீட்டில் இருந்து பிரியாணி சாப்பிடுவதாக விமர்சித்தார்.

மேலும் 2019 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மனோபாவம் தமிழ்நாட்டில் இருந்த நிலையில், தற்போது அது மாறி 2024 தேர்தலில் எங்களுடைய கூட்டணி 2-ம் இடத்திற்கு வந்துள்ளதாகவும், இதே நிலையில் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்வோம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People in AIADMK are diabetic eps will pull AIADMK and shut it down in 2026 TTV Dhinakaran hits hard


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->