மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள்!...நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது - சித்தராமையா! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், மைசூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின்  போது மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய அவுட்டில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த சில நாட்களில் உண்மை வெளிவரும் என்றும், 17ஏ-வின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன். இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் எனக்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும், நான் ஏழைகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதிக்காகவும் போராடி வருவதால், பாஜக மற்றும் ஜேடி(எஸ்) என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People support me I have faith in the judiciary siddaramaiah


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->