மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று செயற்குழு கூட்டம்! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

குறிப்பாக கமல்ஹாசன் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People's Neeti Maiyam party president Kamal Haasan chaired the working committee meeting today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->