மோடியே இது பெரியார் மண்..வைகோ ஆவேச பேச்சு.!! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 19 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், விசிக கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற இண்டியா கூட்டணி வேட்பாளருமான தொல் திருமாவளானை ஆதரித்து அரியலூர் பேருந்து நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வைகோ பேசுகையில், ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையேயான போர் இந்த தேர்தல் என்று குறிப்பிட்டார்.

மோடிக்கு தெரியாது இது பெரியாரின் திராவிட இயக்க பூமி என்று. மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து  நாட்டை அழித்துவிடும்  என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar land tamilnadu Vaiko speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->