காயமடைந்த எம்பிக்களை நலன் விசாரித்த பிரதமர் மோடி!
PM Modi BJP MP
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் உடல் நலனை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை பற்றி நாடாளுமன்றத்தில் பேசியதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் பாஜக எம்பி-க்கள் இருவர் காயமடைந்தனர்.
போராட்டத்தின் போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
முகேஷ் ராஜ்புத் எம்.பி.க்கும் இதேபோன்று காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தனது காயத்துக்கான காரணமாக, ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்.பி. தன் மீது விழுந்ததாக பிரதாப் சந்திர சாரங்கி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.