ஜி 7 மாநாடு: பிரதமர் மோடி இத்தாலி பயணம்!
PM Modi Travelling to Italy For G7 Conference
இத்தாலியில் ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை ஜி 7 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளுக்கும், பல சர்வதேச அமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கும் மாநாட்டை நடத்தும் இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இத்தாலியுடன் சேர்த்து மொத்தம் 7 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள செல்கின்றனர். உலகின் மிக அதிகாரம் மிக்க அமைப்பான ஜி 7 ல் மேற்கண்ட ஏழு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த ஜி 7 அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் பூமியோ ஹிஸாடியா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட ஜி 7 அமைப்பின் 7 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்த ஜி 7 அமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார். பிரதமராக பதவி ஏற்றபின் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்று உலக நாடுகளிடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜி 7 மாநாடு அனைத்து நாடுகளின் முக்கியத்துவத்தையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
PM Modi Travelling to Italy For G7 Conference