இந்த பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் பெருநாளான பக்ரீத் பண்டியை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாட்டின் முக்கியத் தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"ஈத் முபாரக்! ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்". என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish eid mubarak 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->