இது திசைதிருப்பும் செயல்! ஆக்கபூர்வமாக செயல்படுங்கள் - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin RN Ravi
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இவ்வாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையை விட்டு வெளியேறினார். மேலும், தேசிய கீதம் ஒளிக்கப்படாததால் அவர் புறப்பட்டு சென்றதாக ஆளுநர் மளிகை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுனருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன.
அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin RN Ravi