வன்னியர் உள் ஒதுக்கீடு : உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் - Dr. அன்புமணி இராமதாஸ் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையில் உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. 

இந்நிலையில், இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான எழுவர் குழு சந்திப்பு நடத்தியது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்ததாவது,

"வன்னியர்களுக்கு மீண்டும் உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். தேவையான தரவுகளை திரட்டி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். 

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம். வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk anbumani ramadoss meet cm stalin for reservation


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->