இன்றே ஓய்வு அறிவிக்கவிருக்கிறார் தோனி?! மைதானத்திற்கு வந்த தாய், தந்தை! சேப்பாக்கத்தில் பரபரப்பு!
CSK MS Dhoni IPL Retirement
2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி துவங்கி, மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில், இன்று சென்னையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியே மகேந்திர சிங் தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்றும், இதையடுத்து அவர் ஐபிஎல் தொடர் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ருதுராஜ் விளையாடமாட்டார் என்றும், தோனியே அணியை வழிநடத்துவார் என முதல்கட்டமாக கூறப்பட்டது. ஆனால் போட்டி தொடங்கும் நேரத்தில் ருதுராஜ் தான் கேப்டனாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முந்தைய போட்டிகளில் தோனி கடைசி ஓவர்களில் மட்டும் களமிறங்கியதற்காக, அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், “முழங்காலுக்கே காயம். தொடக்க ஓவர்களில் விளையாட முடியாது” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று தோனியின் பெற்றோர் மைதானத்திற்கு வந்து இருப்பது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் பெற்றோர் மைதானத்திற்கு வந்துள்ளது அவரது ஓய்வை உறுதி செய்யும் முன்னோட்டமா? எனும் கேள்விகள் எழுகின்றன. இதனை குறிப்பிட்டே ரசிகர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
CSK MS Dhoni IPL Retirement