அரசு பழைய பேருந்துகளை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதியா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட அரசு ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும்  ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டு சாலைகளில் இயக்கத்த குதியற்ற பேருந்துகளை  தொடர்ந்து இயக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த ஊர்திகள் இயக்கப்படாவிட்டால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது உண்மையும் இல்லை.

15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க  வேண்டும். அவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளையும், ஊர்திகளையும் வாங்கி தமிழ்நாடு அரசு இயக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss TN Govt Bus TNSTC 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->