அன்புமணி இராமதாஸ் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் திமுகவினர்! அம்பலமான உண்மை!
PMK Anbumani Ramadoss Viral pic
மழை வெள்ளம் மற்றும் சாத்தனூர் அணையிலிருந்து இரவு 2 மணிக்கு திறந்து விடப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் (1,70,000) கனஅடி தண்ணீரால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், கண்டக்காடு கிராம பொதுமக்களுக்கு, பாமக சார்பில் நிவாரணம் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, தேவையான மருத்துவ உதவிகளை செய்தார்.
இந்த நிகழ்வில் அன்புமணி இராமதாஸ் சிறுவன் ஒருவனுக்கு ஸ்டெத் மிருதுவா கருவியை காதில் பொருத்தம் சிகிச்சை அளிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்றை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் உண்மையா என்பது குறித்து ஆய்வு செய்ததில், அன்புமணி இராமதாஸ் மக்களுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு புறப்பட்ட நேரத்தில், அருகில் நின்ற பெண் மருத்துவர் தமிழரசி அவர்கள், சிறுவனை காட்டி, "இவனுக்கு ஸ்டெத் மட்டும் வைத்துவிடுங்கள்" என்கிறார்.
புறப்படும் அவசரத்தில் இருந்த அன்புமணி இராமதாஸ், ஸ்டெத்தை காதில் இல்லை என்பதை உணர்ந்து, அடுத்தக் கணமே காதில் வைத்து சிறுவனுக்கு பொறுமையாக பரிசோதனை செய்து அனுப்புகிறார்.
அந்தச் சிறுவன் ஆசைக்காக செய்யாமல், அவன் உடல் நலத்தையே சோதனை செய்துவிட்டுத்தான் அன்புமணி இராமதாஸ் சென்றுள்ளார் என்பது கீழ்காணும் காணொளி மூலம் உறுதியாகியுள்ளது.
திமுகவின் ஆதரவு ஊடகம் மற்றும் திமுகவினர் மட்டுமே இதனை திட்டமிட்டு அவதூறு பரப்பி உள்ளனர் என்பதும் உறுதியாகியுள்ளது.
English Summary
PMK Anbumani Ramadoss Viral pic