பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு - அதிர்ச்சியில் பாமகவினர்!! - Seithipunal
Seithipunal


கடுமையான வெப்ப அலை காரணமாக பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைக்கபடுவதாக பா.ம.க. தலைமை நிலைய அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் தெரிவித்துள்ளாவது,

பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு & தேதி பின்னர் அறிவிக்கப்படும்


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம்  விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வரும் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த கலந்தாய்வுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டங்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk consultation meeting postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->