எல்.வி.இராமசாமி மறைவு - மருத்துவர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


பாமகவை சேர்ந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான லாலாப்பேட்டை எல்.வி.இராமசாமி மறைவுக்கு, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ராணிப்பேட்டை மாவட்டம்,  வாலாஜா வட்டம்,  லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் எல் வி ராமசாமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனயடைந்தேன்.

1985-ஆம் ஆண்டு முதல் வன்னியர் சங்கத்திலும், தொடங்கப்பட்ட நாள் முதல் பாட்டாளி மக்கள் கட்சியிலும் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த எல் வி ராமசாமி, இரு அமைப்புகளின் சார்பில் நான் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Condolence LV Ramasami


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->