அய்யா வைகுண்டரின் அவதார நாளில் சமூகநீதிக்காக போராட உறுதியேற்போம் - டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Ayya Vaikundar
சமத்துவத்தை போதித்த, சமத்துவத்திற்காக போராடியஅய்யா வைகுண்டரின் அவதார நாளில் சமூகநீதிக்காக போராட உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மண்ணில் தோன்றிய மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற உன்னத கொள்கையை போதித்த அய்யா வைகுண்டரின் 193-ஆம் அவதார நாள் இன்று. ஏற்றத்தாழ்வுகளை போக்க வேண்டும்; சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து மக்களையும் சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார்;
அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் அய்யா வைகுண்டர் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் நிகழ்த்தப்பட்டது. உன்னதக் கொள்கைகளை உருவாக்கிக் கடைபிடித்த அய்யா வைகுண்டரை இந்த நாளில் போற்றுவோம்.
அய்யா வைகுண்டர் கனவு கண்ட சமத்துவத்தை ஏற்படுத்த ஒரே வழி சமூக நீதி தான். அதற்கான அடித்தளமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும், அதன் வாயிலாக சமத்துவத்தை ஏற்படுத்த இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Ayya Vaikundar