கஞ்சா குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட காவலர் மனக்குமுறல்..புதுச்சேரி அரசு கண்டுகொள்ளுமா?
Police victim of cannabis offenders Will the Puducherry government care?
காவலர் வசந்த் கஞ்சா குற்றவாளிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு பல இடங்களில் எலும்பு முறிவு மற்றும் தலையில் எலும்பு சிதைவு போன்ற பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் ஆறாத வடுவகம் மாறி இருக்கிறது. இதற்கு காவல்துறை மற்றும் அரசு என்ன இழப்பீடு தர போகிறது. ஆறுதல் சொல்ல கூட முன்வரவில்லை.
புதுச்சேரி காவல்துறையில் 2024 ஆகஸ்ட் 8ம் தேதியில் வசந்த் காவலர் 3153 என்பவர் பணியின் போது கஞ்சா குற்றவாளிகளால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த படுக்காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் பல மாதங்களுக்கு சிகிச்சை எடுத்த பிறகு பணி இணைந்துள்ளார்.
காவலர் வசந்த் என்பவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது புதுச்சேரி காவல்துறையில் சார்பாக ஒரு ரூபாய் கூட இதுவரை கொடுக்கப்படவில்லை . வசந்த் உடன் பணிக்கு சேர்ந்த காவலர்கள் சார்பாக மருத்துவ சிகிச்சைக்காக அனைவரிடமும் வசூல் செய்து இரண்டு லட்ச ரூபாய் அவர்கள் குடும்பத்தாருக்கு கொடுத்தார்கள்.
காவலர் வசந்த் தாக்கிய கஞ்சா குற்றவாளிகளை இதுவரை கடுமையான தண்டனை கொடுக்கவில்லை . காவலர் வசந்த் கஞ்சா குற்றவாளிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு பல இடங்களில் எலும்பு முறிவு மற்றும் தலையில் எலும்பு சிதைவு போன்ற பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் ஆறாத வடுவகம் மாறி இருக்கிறது. இதற்கு காவல்துறை மற்றும் அரசு என்ன இழப்பீடு தர போகிறது. ஆறுதல் சொல்ல கூட முன்வரவில்லை...
மற்ற மாநில காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பணியின் போது குற்றவாளிகளால் இது போல காயங்கள் மற்றும் பலத்த படு காயங்கள் ஏற்பட்டால் 5000 ரூபாய் முதல் 5 லட்சம் வரை இழப்பீட்டு தொகை தருகிறார்கள். மேலும் காவல்துறையினர் தாக்கிய குற்றவாளி மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு படி மேலே போய் துப்பாக்கி சூடு வரை சென்று காவல்துறையின் கண்ணியத்தையும், நன்மதிப்பை மதிக்கும் அளவிற்கு நிலைநாட்டுகிறார்கள் .
ஆனால் புதுச்சேரி காவல்துறையில் பல ஆண்டுகளாக காவலர்கள் பணியின் போது ரவுடிகளாலும் குற்றவாளிகளாலும் பல்வேறு விதமான பாதிப்புகள் மற்றும் பிரச்சனை தொடர்ந்த ஏற்பட்டு வருகிறது. காவலர்களுக்கு உடல் ரீதியான பாதிக்கப்பட்டாலும் அதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தவருக்கும், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கும், அவர்களின் மறுவாழ்வு எந்த ஒரு செயல் திட்டங்களும் மற்றும் காவல்துறையினர் தாக்கிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுப்பதலும் இது புதுச்சேரி அரசும், காவல் துறை நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை...
இதுவே உயர் அதிகாரி நடந்திருந்தால் அரசும் காவல்துறையின் எம் மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கும். அடிமட்டத்தில் இருக்கும் காவலர்களுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படும் போது ஓரளவாக மனசாட்சியுடன் நேர்மையாக செயல்பட்டால் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தைரியத்துடன் நம்பிக்கையுடனும் குற்றவாளிகளில் பிடிப்பதற்கும் குற்றங்களை தடுப்பதற்கு செயல்படுவார்கள். இல்லையென்றால் நாம்மை காப்பாற்றுவதற்கு ஆறுதல் சொல்ல கூட இவ் அரசும் காவல்துறை நிர்வாகமும் முன் வராது என்பதால் குற்றங்களை கண்டுக்காமல் தன் உடமை, உயிரையும் பாதுகாத்துக் கொள்ளவதற்காகவே பணி செய்து வருகிறார்கள்... இனி வரும் காலங்களில் மாற்றங்கள் ஏற்படுமா என்று காவல்துறையில் பணிபுரிவர்கள் வலியும் வேதனை உடனும் காத்திருக்கின்றனர்.
English Summary
Police victim of cannabis offenders Will the Puducherry government care?