அன்று கருணாநிதி, இன்று ஸ்டாலின்! திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை... டாக்டர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தான் தூண்டி விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கூறியதை நம்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆறாம் அறிவு இல்லையா? 

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்வதற்கு முன் முறையாக புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. 

ஆனால், அவற்றை மதிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்ட தரப்பினர் மீதே காவல்துறை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஒட்டுமொத்த சதியிலும் காவல்துறையும் பங்காளியாக இருக்குமோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 

1996-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர், அன்றைய காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் விமர்சிக்கும் போது காவல்துறையினரின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது என்று கூறினார். 

ஆனால், கடலூர் மாவட்ட நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது காவல்துறையினரின் ஈரல் மட்டுமல்ல.... இதயம், மூளை ஆகியவையும் முழுமையாக அழுகி விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 

தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். 

ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், காவல்துறையினரின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது, கடலூர் புதுச்சத்திரத்தில் இராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான். 

திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Condemn to DMK MK Stalin Govt Vanniyar Manjakollai issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->